மனைவியை தொடர்ந்து முதலமைச்சருக்கும் கொரோனா பாதிப்பு !!

மனைவியை தொடர்ந்து முதலமைச்சருக்கும் கொரோனா பாதிப்பு !!

Update: 2021-04-29 19:17 GMT

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2ஆவது அலை மிகத்தீவிரமாக பரவி அச்சுறுத்தி வருகின்றனர். எனினும் அதனை கட்டுப்படுத்த பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொடர்பான பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நன்றாக இருக்கிறேன். கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி என்னை தனிமைப்படுத்திக்கொண்டு பணியில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் வீட்டில் இருந்தபடியே அரசு அலுவல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  
முன்னதாக, அவரது மனைவி சுனிதா கெலாட்டுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   

newstm.in

Tags:    

Similar News