கொரோனா பாதிப்புக்கு மருந்து!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி பதிவு.!!

கொரோனா பாதிப்புக்கு மருந்து!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி பதிவு.!!

Update: 2020-03-22 07:50 GMT

உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயன்று வரும் நிலையில் அமெரிக்கா பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகின்றது.

சில நாட்களுக்கு முன்பு கூட செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் விரைவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டும் என்றும் , தடுப்பூசி சோதனை நடாத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து மலேரியா மருந்து கொரோனவை கட்டுப்படுத்தும் என்று தெரிவித்திருந்த டிரம்ப் , தற்போது கொரோனா பாதிப்புக்கு மருந்து தயார் என்று தெரிவித்துள்ளார்.
அதில் , அஸித்ரோமைசின் , ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2 மருந்தையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் உலக நாடுகள் பலவும் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பட்சத்தில் இந்த மாத்திரை இந்தியாவில் இலகுவாய் கிடைக்கும் மற்றும் இதன் விலை நூறு ரூபாய்க்கும் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

newstm.in 

Tags:    

Similar News