அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் வேட்பாளர் பரிதாபங்கள்!
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் வேட்பாளர் பரிதாபங்கள்!
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கொடூரமாக அடித்து வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என வைரஸ் தொற்று யாரையும் விட்டுவைக்கவில்லை.
சட்டமன்ற தேர்தலின் போதே வேட்பாளர்கள் பலருக்கு நோய் தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது அது தொடரவும் செய்கிறது. அந்த வகையில் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கி நண்பர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
newstm.in