தமிழகத்தில் கொரானோ வைரஸ்- சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்
தமிழகம் இதுவரை 7 பேருக்கு கொரானோ வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேராளாவிலும் கொரானோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சுகாதாரத் துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானோ வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 23 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா மற்றும் வைரஸ் பரவிய நாடுகளிலிருந்து தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப் படுகின்றனர். இருந்தும் இதுவரை 7 பேருக்கு கொரானோ வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து பரவுவதை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. அனைத்து மாவட்ட அரசு மருத்துவ மனைக்கும் பாதுகாப்பு உடைகள் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அண்டை மாநிலமான கேராளாவிலும் கொரானோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சுகாதாரத் துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.
newstm.in