ஒருவருக்கு கொரோனா… பேருந்து நிறுத்தம்… பள்ளி மூடல்… அதிரடி கட்டுப்பாடுகள்!!

ஒருவருக்கு கொரோனா… பேருந்து நிறுத்தம்… பள்ளி மூடல்… அதிரடி கட்டுப்பாடுகள்!!

Update: 2021-12-23 08:29 GMT

வியட்நாம் எல்லையில் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை அடுத்து அந்த ஊரில் மொத்த பொதுப் போக்குவரத்தையும் சீன அரசு நிறுத்தி விட்டது.

சீனாவிலிருந்து கிளம்பிய கொரோனா தற்போது ஓமைக்ரானாக மாறி உலக நாடுகளில் பரவி வருகிறது.
இந்நிலையில் சீனாவில் ஒரு ஊரில் ஒரே ஒருவருக்கு கொரோனா வந்ததைத் தொடர்ந்து அந்த ஊரையே இழுத்து மூடி விட்டது சீனா

வியட்நாம் நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள குவாங்ஸி பிராந்தியத்தில் உள்ள டாங்ஸிங் நகரில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது. இதையடுத்து ஊரை மொத்தமாக மூடி விட்டது சீனா அரசு.

நகரில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது.

அவசரத் தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டு விட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. தீவிர கண்காணிப்பில் அந்த நகரம் வைக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News