கொரோனோ தொற்றால் இந்தியாவில் முடங்கிப் போன வணிகம்..!
கொரோனாவின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா சிக்கி தவித்து வரும் சூழ்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனாவின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா சிக்கி தவித்து வரும் சூழ்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் கொடூர தாண்டவம் இன்னும் நின்றபாடில்லை. சீனாவில் துவங்கிய இதனுடைய பாதிப்பு ஆசியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் உணரத் தொடங்கியது.
அப்போது தொடங்கிய பீதி, தற்போது வரை உலக மக்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று, சீனா உட்பட ஆசியாவின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் குறிப்பாக இந்தியாவின் வர்த்தகம் சிறுக சிறுக முடங்கி போகும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் வாகன உற்பத்தி, பொம்மை உற்பத்தி உள்ளிட்டவை பெரியளவில் வீழ்ச்சியை சந்திக்கும் என சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் வசந்த காலத்தை வரவேற்பதற்காக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கான வர்த்தகத்தை தற்போது தொடங்கினால் தான், பண்டிகை காலங்களில் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்கும்.
ஹோலிப் பண்டிக்கைக்கு தேவையான கலர் பொடிகள், மொம்மை துப்பாகிகள், தண்ணீர் தெளிப்பான்கள் போன்ற பெரும்பாலான பொருட்கள் சீனாவில் இருந்து தான் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.சீனப் பொருட்களை பயன்படுத்த மற்ற நாட்டினர் அச்சப்படும் சூழலில், இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவக்கூடும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் ஹோலிப் பண்டிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கும் சில்லறை வணிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
மேலும், இந்தியாவிலும் ஹோலிப் பண்டிக்கைக்குரிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கொரோனா பீதியால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹோலிப் பண்டிகை பொருட்களை வாங்கவும் மக்கள் அச்சப்படுகின்றனர் என்று தெரிவிக்கின்றனர் சில்லறை வியாபாரிகள்.
கொரோனா தொற்று குறித்து உறுதியற்ற வகையில் பல்வேறு செய்திகள் சமூகவலைதளங்களில் பரவி வருவதால், இந்தியாவில் பொம்மை தொழிலை நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் புதிய ஆர்டர்களை எடுக்காமல் உள்ளன. சீனாவிலுள்ள நிலைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் மட்டுமே, தங்களுடைய தொழில் மீண்டும் பழைய நிலைக்கு மாறும் என வணிகர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
newstm.in