டிரஸ்ஸே இல்லாமல் சிதைக்கப்பட்ட பெண் சடலம்.. 17 வயது சிறுவனின் கோர முகம்..
டிரஸ்ஸே இல்லாமல் சிதைக்கப்பட்ட பெண் சடலம்.. 17 வயது சிறுவனின் கோர முகம்..
விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி குவார்ட்டர்ஸ் பகுதியில் நிறைய பாழடைந்த வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 14ஆம் தேதி இரவு இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடம்பில் துணி இல்லாமல் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை கண்காணித்த போலீசார் பின்னர் சிறுவனை பிடித்து விசாரித்தனர். நான் தான் அப்பெண்ணை கொலை செய்தேன் என சிறுவன் கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நான் ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீனில் டீ விற்று வருகிறேன். இதே ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுக்கும் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில்தான் தங்கியிருப்பார்.
இரவில் சிலர் பணம் கொடுத்து அப்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்து செல்வர். இதை தினமும் பார்த்து வந்த தானும் அந்த பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் என் கையில் இருந்த பணத்தை பெண்ணுக்கு காட்டி, பாழடைந்த ரயில்வே குவார்ட்டர்ஸ் பகுதிக்கு கூட்டிட்டு வந்தேன். என்கிட்ட இருந்த 50 ரூபாயை கொடுத்தப்போது, அதனை வாங்க மறுத்து 500 ரூபாய் வேண்டும் என்று அவர் சண்டை போட்டார்.
மேலும் உல்லாசத்துக்கு அவர் மறுத்தார். நான் அவரை விடாததால், இது குறித்து பெற்றேரிடமும், போலீசாரிடமும் கூறுவன் என அப்பெண் கூறினார். இதனால் ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து பெண்ணின் முகத்தில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.. இவ்வாறு அந்த சிறுவன் வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர்.
newstm.in