ஊழலில் சிக்கித் தவிக்கும் காவல்துறை!

ஊழலில் சிக்கித் தவிக்கும் காவல்துறை!

Update: 2020-02-09 01:04 GMT

கடந்த 2016ம் ஆண்டு  நடைபெற்ற வாக்கி டாக்கி ஊழல் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை  நடத்தி வருகின்றனர்.

தமிழக காவல்துறையில் மிகப் பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளன. அதற்கு அத்தாட்சியாக வாக்கி டாக்கி வாங்குவதில் நடந்த முறைகேடுகளை சுட்டிக் காட்டுகின்றனர்.

இது தொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குனர், விளக்கம் அளிக்க வேண்டும் என உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருப்பது இதை உறுதி செய்துள்ளது. காவல்துறைக்கு வாக்கிடாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது.  

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள காவல் வானொலி அலுவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும், தொழில்நுட்ப பிரிவில் பணிபுரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ் மற்றும் உதயசங்கர் ஆகிய இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி  வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News