யானைகளின் வீட்டுக்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்- மிரட்டும் காடன் டிரெய்லர்..!

யானைகளின் வீட்டுக்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்- மிரட்டும் காடன் டிரெய்லர்..!

Update: 2021-03-04 13:01 GMT

பிரபு சாலமன் மூன்று மொழிகளில் இயக்கியுள்ள காடன் படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியானதை அடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘தொடரி’ படத்தை தொடர்ந்து, பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் ‘காடன்’. இந்த படத்தின் ராணா டகுபாத்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. தமிழ், தெலுங்கு பதிப்புகளில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்தி பதிப்பில் அவருடைய கதாபாத்திரத்தில் புல்கிட் சாம்ராட் நடித்துள்ளார். மூன்று மொழிகளிலும் ராணா டகுபாத்தி கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளார். அதேபோல மூன்று மொழி பதிப்புகளிலும் கதாநாயகியாக ஷ்ரியா பில்கான்கர் நடித்துள்ளார்.

சுமார் மூன்று நிமிடம் ஓடக்கூடிய டிரெய்லரில் மனிதனால் காடுகள் ஆக்கிரமிக்கப்படும் போது, அதில் வாழும் உயிர்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என்கிற கேள்வியை கதைக்களமாக கொண்டு இப்படம் தயாராகியுள்ளது தெரிய வருகிறது. டிரெய்லரை பார்க்கும் போது கிராஃபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. விஷுவல் எஃப்கிட்ஸில் காடன் படம் தனித்து தெரிகிறது.

அதன்படி தமிழில் காடன் என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஆரன்யா’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஹாத்தி மேரி சாத்தி’ என்ற பெயரிலும் ஒரேநேரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Full View

Tags:    

Similar News