டீக்கடை லாபத்தை வைத்து 25 வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்த தம்பதி..!!

டீக்கடை லாபத்தை வைத்து 25 வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்த தம்பதி..!!

Update: 2021-10-04 14:15 GMT

கேரளாவில் டீ-கடை நடத்தி வருபவர் கே.ஆர். விஜயன். இவர் தனது மனைவியுடன் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினர் டீக்கடையில் வரும் லாபத்தை சேர்த்து வைத்து அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.உலகம் முழுவதும் இதுவரை 25 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளனர். 

அந்த வகையில் அக்டோபர் 21 முதல் 28 வரை ரஷியாவிற்கு சுற்றுலா செல்கின்றனர். பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.எப்போதும் கணவன் மனைவி மட்டும் செல்பவர்கள் தற்போது பேரனையும் அழைத்துச் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கே.ஆர். விஜயன் விடுத்த செய்திக்குறிப்பில் இதற்கு முன்பு நாங்கள் 2019 நவம்பர்- டிசம்பரில் தான் சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். கொரோனா வந்ததால் அதற்கு பிறகு தற்போது தான் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி மோகனா, 2007 முதல் இதுவரை 25 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளோம். தற்போது செல்ல இருக்கும் ரஷியா நாங்கள் செல்ல இருக்கும் 26வது நாடு எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News