நீதிமன்றம் அதிரடி! பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமை இல்லை!!

நீதிமன்றம் அதிரடி! பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமை இல்லை!!

Update: 2022-01-16 17:42 GMT

பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமையில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.

வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டடம் கட்டப்படும் இடத்தில் பார்க்கிங்கிற்கு இடவசதி இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

அப்படியிருக்கும் போது, கட்டிடம் கட்டிய பிறகு தனியாக பார்க்கிங்கிற்கு கட்டணம் வசூலிக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது. எனது தனிப்பட்ட பார்வையில் அதற்கு சாத்தியமில்லை என்று கருதுவதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு களமசேரி நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மலையாள திரைப்பட இயக்குனர் பாலி வடக்கன், லுலு மாலுக்கு சென்ற போது, அங்கு அவரது வாகனத்தை நிறுத்துவதற்கு ரூ.20 கட்டணம் செலுத்து வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பார்க்கிங் கட்டணம் செலுத்த இயக்குனர் பாலி மறுக்கவே, மால் ஊழியர் வெளியேறும் கதவுகளை மூடி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து கட்டணத்தை செலுத்தி அவர் வெளியேறியுள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் பாலி வடக்கன் வழக்கு தொடர்ந்தார். அதில், வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பார்க்கிங் வழங்குவது என்பது வணிக வளாகத்தின் பொறுப்பே. அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கட்டணம் வசூலிக்க முடியாது என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

எனினும், இயக்குனர் பாலி வடக்கனின் வாதத்தை முற்றிலும் நிராகரித்த லுலு மால் தரப்பு வழக்கறிஞர், தங்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News