பாலத்தில் விரிசல்... 23 ரயில்களின் சேவை ரத்து!!

பாலத்தில் விரிசல்... 23 ரயில்களின் சேவை ரத்து!!

Update: 2021-12-24 20:00 GMT

வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னையாற்றின் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு செல்லும் 22 ரயில்கள் டிசம்பர் 26ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொன்னையாற்றின் குறுக்க ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் காட்பாடி வழியாக சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மேம்பாலத்தின் பில்லர் பகுதியில் விரிசல் ஏற்பட்டதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அவ்வழியாக ரயில்கள் இயக்கப்படுவது நேற்று மாலை நிறுத்தப்பட்டது. மேலும் பராமரிப்பு பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ரயில்கள் ஆங்கங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக நாளை 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

newstm.in

Similar News