ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகள் ? ஐசிசி தீவிரம் !!

ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகள் ? ஐசிசி தீவிரம் !!

Update: 2021-08-10 18:51 GMT

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.

விறுவிறுப்புடன் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும் 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறவுள்ளன. இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும் நிலையில் இருக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதுபற்றி ஐசிசி தலைவர் கிரேக் பார்கிலே கூறியிருப்பது, கிரிக்கெட்டிற்கு வலுவான ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. குறிப்பாக தெற்கு ஆசியாவில் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்காவிலும் 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளார்கள். இதனால் அந்தப் போட்டியில் கிரிக்கெட் பங்கேற்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. 

ஒலிம்பிக் போட்டியில் இணைந்துகொள்ள பல அற்புதமான விளையாட்டுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கிரிக்கெட்டைச் சேர்க்க இதுவே சரியான நேரம். ஒலிம்பிக் கிரிக்கெட்டும் நல்ல கூட்டணியாக அமையும். கடினமான சூழலிலும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரை சிறப்பாக நடத்தி முடித்தற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். 

newstm.in

Tags:    

Similar News