தலையில் காயம்.. நினைவாற்றலை இழந்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்!
தலையில் காயம்.. நினைவாற்றலை இழந்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்!
அபதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – பெஷாவர் ஷால்மி ஆகிய அணிகள் மோதின. ப்ளசிஸ் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்தை தடுப்பதற்காக டூப்ளசிஸ் ஓடினார்.
அப்போது எதிரே சக வீரர் முகமது ஹஸ்னைன் ஓடிவந்தார். அப்போது டூப்ளசிஸ் தலை ஹஸ்னைன் காலில் மோதியது. இதனையடுத்து டூப்ளசிஸ் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதாவது, சிறிது நேரம் மைதானத்தில் அமரவைக்கப்பட்ட டூப்ளசிஸ், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
இதனிடையே தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து ட்விட்டரில் டூப்ளசிஸ் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,
மெசேஜ் அனுப்பி ஆதரவைக் காட்டிய அனைவருக்கும் எனது நன்றி. தற்போது ஓட்டலுக்கு திரும்பிவிட்டேன், குணமடைந்து வருகிறேன். சிறிதளவு நினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது/ ஆனால் நான் சரியாகிவிடுவேன். விரைவில் களத்துக்கு திரும்புவேன் என நம்புகிறேன்” இவ்வாறு டுபிளசிஸ் தெரிவித்துள்ளார்.
டூப்ளசிஸ்க்கு நேர்ந்த இந்த எதிர்பாராதவிதமான காயம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டூப்ளசிஸ் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you everyone for all the messages of support. I'm back at the hotel recovering. Have concussion with some memory loss but I will be fine. Hopefully be back on the field soon. Much love. ❤️
— Faf Du Plessis (@faf1307) June 13, 2021
newstm.in