இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டி20 போட்டிகள் வரும் 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளதுது. இதில் இங்கிலாந்து டி20 அணியில் ஆல்ரவுண்டர் சாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார். 

சாம் கரன் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடினார். அவரை சிஎஸ்கே ரசிகர்கள் சுட்டிக் குழந்தை சாம் கரன் என அன்புடன் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் அகமதாபாத்தில் தங்கியிருக்கும் அவர் பேட்டியளித்துள்ளார்.
 

அதில், கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு பின்பு என்னை நான் மேம்படுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். சிஎஸ்கே அணியில் எனக்கு வெவ்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. தொடக்க வீர்ராகவும், 3 ஆவது பேட்ஸ்மேனாகவும் களமிறங்கினேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது என்றார்.

மேலும் அதன் காரணமாக தன்னுடைய திறனை மேம்பட்டதை நான் உணர்ந்தேன். ஐபிஎல் ஒரு அற்புதமான டி20 தொடர். அதுவும் இந்தியாவில் விளையாடுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்  எனவும்  சாம் கரன் கூறினார்.  

அதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. அதற்கு தயாராவதற்கு இந்தத் டி20 தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன் என்றும் சாம் கரன் கூறினார்.

newstm.in


 

Tags: