தன்னுடைய செயலற்ற தன்மை பெர்ஃபாமென்ஸ் கோளாறுகளை பாஜக மீது தூக்கி போடுகின்றார் சி.வி.சண்முகம்..!!

தன்னுடைய செயலற்ற தன்மை பெர்ஃபாமென்ஸ் கோளாறுகளை பாஜக மீது தூக்கி போடுகின்றார் சி.வி.சண்முகம்..!!;

Update: 2021-07-07 16:05 GMT

“தன்னுடைய செயலற்ற தன்மையை, தன்னுடைய பெர்ஃபாமென்ஸ் கோளாறுகளை பாஜக மீது தூக்கி போடுகின்றார் சி.வி.சண்முகம். பாஜகவை வசைபாடுவதை ஏற்க முடியாது. அதிமுக தலைமை இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என, பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

“பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுக தோற்று போனதற்கு காரணம்” என, சமீபத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது; “முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய கருத்து கூட்டணியில் சண்டையை உருவாக்கும் முயற்சி. பாஜகவுடன் கூட்டணி என தெரிந்துதான் தேர்தலில் நின்றார், தேர்தலில் தோற்ற பின் பாஜக மீது குற்றம்சாட்டுவது ஏற்க முடியாது. அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் குழப்பம் இல்லாமல் இருக்கும்.

சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை எனக் கூறி, தனக்கு வாக்களித்த  87,403 மெஜாரிட்டி மக்களையும் சி.வி.சண்முகம் அவமானப்டுத்துகின்றார். பல முன்னாள் அமைச்சர்கள் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது சி.வி.சண்முகம் சரியாக பெர்ஃபாமென்ஸ் செய்யாததால் தோற்றார்.

வெறும் 14 ஆயிரம் சிறுபான்மை ஓட்டுகளை மெஜாரிட்டி மக்களுடன் ஒப்பிடுவது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது. தன்னுடைய செயலற்ற தன்மையை, தன்னுடைய பெர்ஃபாமென்ஸ் கோளாறுகளை பாஜக மீது தூக்கி போடுகின்றார் சி.வி.சண்முகம். பாஜகவை வசைபாடுவதை ஏற்க முடியாது. அதிமுக தலைமை இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இந்த கருத்தை அதிமுக தலைமை ஏற்கவில்லை எனில், சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 வருடம் அமைச்சராக இருந்து சரியாக பெர்ஃபாமென்ஸ்  காட்டி இருந்தால் சிறுபான்மையினர் வாக்களித்து இருப்பார்கள். பொது வெளியில் இந்த கருத்தை சி.வி.சண்முகம்  சொன்னதால் அதிமுக இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்றார்.
Tags:    

Similar News