சிலிண்டர் வருது, மானியம் வரலையா..?: அப்போ இதை பண்ணுங்க..!
சிலிண்டர் வருது, மானியம் வரலையா..?: அப்போ இதை பண்ணுங்க..!
வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 79.26 முதல் 237.78 வரை மானியம் வழங்குகிறது. இந்த மானியம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
ஆனால், ஒரு சிலருக்கு மானிய தொகை வரவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. அதற்கு சில காரணங்கள் உள்ளது. அதாவது, சரியான வங்கிக் கணக்கு எண்ணை வழங்காமல் இருப்பது, எல்ஜிபி ஐடியை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்காமல் இருப்பது, ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைக்காமல் இருப்பது மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த மானிய தொகை கிடையாது.
இவையெல்லாம் சரியாக இருந்தும் உங்களுக்கு மானிய தொகை வருகிறதா என்பதை அதிகாரப்பூர்வமான இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு, https://mylpg.in/index.aspx என்ற இணையதளத்தில் சென்று உங்களுடைய எல்ஜிபி ஐடியை உள்ளிடவும்.
நீங்கள் எந்த நிறுவனத்தின் எல்ஜிபி சிலிண்டரை பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அது தொடர்பான விவரங்களையும் பதிவிட வேண்டும்.
அடுத்ததாக, உங்களுடைய 17 இலக்க எல்ஜிபி ஐடியை உள்ளிட்டு செல்போன் எண்ணை பதிவுசெய்ய வேண்டும். அதன் பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ‘proceed’ கொடுக்க வேண்டும்.
இப்போது, பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP வரும். அடுத்து உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். பாஸ்வர்டை பதிவிட்டதும், உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு லிங்க் வரும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு, mylpg.in அக்கவுண்டில் உள்நுழைந்து பாப்-அப் செய்தியில் உங்களுடைய விவரங்களை உள்ளிடவும். இப்போது, View Cylinder Booking History / Subsidy Transfer என்ற வசதியை கிளிக் செய்யவும். இதில், உங்களுக்கு தேவையான விவரங்கள் இருக்கும்.