அட கொடுமையே !!- இது தான் ரேட்.. பேஸ்புக்கில் சிறுமியின் படத்தை பகிர்ந்த இளம்பெண் !

அட கொடுமையே !!- இது தான் ரேட்.. பேஸ்புக்கில் சிறுமியின் படத்தை பகிர்ந்த இளம்பெண் !

Update: 2021-02-27 14:33 GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் ராதா சிங் (32) என்பவர் எப்போதும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கக்கூடியவர். இதனால் அவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், அப்பெண்ணின் ஒரு பதிவு திடீரென அனைவருக்கும் பரபரப்பை கொடுத்தது. அதாவது, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து, ஒரு சிறுமியின் புகைப்படத்தை அவரது செல்போன் எண்ணுடன் பகிர்ந்தார். அதில், ரூ.2,500 என்ற விலைப் பட்டியலும் குறிப்பிட்டு இழிவாகப் பதிவிட்டிருந்தார். 

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த அச்சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த சிறுமியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ராதா சிங், சில அவதூறான மெசேஜ்களையும் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து ராதா சிங் மீது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து, அவரை அகமதாபாத் சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், முன்பு தான் டெல்லியில் வசித்து வந்ததாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்ததாகவும் ராதா சிங் தெரிவித்தார். அகமதாபாத்தில் அந்த சிறுமியின் தந்தையுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். 

அதன்பின் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதையடுத்து அவரை பழிவாங்கும் வகையில் அவரது மகளின் புகைப்படத்தை எடுத்து பேஸ்புக்கில் ராதா சிங் அவதூறாகப் பதிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  

newstm.in

Tags:    

Similar News