அடபாவி.. இதெல்லாம் ஒரு காரணமா? ஊருக்குள் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட் !!

அடபாவி.. இதெல்லாம் ஒரு காரணமா? ஊருக்குள் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட் !!

Update: 2021-08-13 06:49 GMT

ஐஸ் கிரீம் என்றால் விருப்பம் இல்லாதவர்களே இருக்க முடியாது. உடல்நிலை சரியில்லை, தொண்டை பாதிப்பு என்றாலும் அருகில் இருப்பவர் ஐஸ் கிரீம் சாப்பிட்டால் சிறிது அளவிலாவது சாப்பிடவேண்டும் என தோண்றும். அப்படி ஐஸ் கிரீம்க்கு ஆசைப்பட்டு ஒரு சம்பவம் இங்கு நடந்துள்ளது.

கனடா நாட்டில் உள்ள டிஸ்டேல் நகரின் மையப்பகுதியில் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாகாணத்தின் மருத்துவ விமான ஆம்புலன்சின் அதே வண்ணம் அந்த ஹெலிகாப்டருக்கும் பூசப்பட்டிருந்ததால், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும், அவசர மருத்துவ உதவிக்காக ஒருவேளை ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நினைத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஹெலிகாப்டரை இயக்கிய பெயர் குறிப்பிடாத 34 வயதான பைலட், ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதால் அதனை எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தரையிறக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் தரையிறக்கிய இடத்தின் அருகிலேயே ஐஸ் கிரீம் கடை ஒன்றும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து பைலட் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர். அவரிடம் ஹெலிகாப்டரை இயக்குவதற்கான லைசன்ஸ் இருந்தாலும், பார்க்கிங் இல்லாத இடத்தில் அவர் அதனை இறக்கியதும், ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஒன்றும் அவசரத்தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை பைலட் நிறுத்திய சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News