ஐட்டம் பாட்டுக்கு குட்டி கவுனில் கலக்கல் டான்ஸ்.. இது ஐக்கி பெர்ரி வெர்ஷன்- வைரல் வீடியோ !

ஐட்டம் பாட்டுக்கு குட்டி கவுனில் கலக்கல் டான்ஸ்.. இது ஐக்கி பெர்ரி வெர்ஷன்- வைரல் வீடியோ !

Update: 2022-01-20 08:34 GMT

பிரபல ராப் பாடகி ஐக்கி பெர்ரி. தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் அழகு சிகிச்சை நிபுணராகவும் உள்ளார். அண்மைக்காலமாக அதிகளவில் வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்த இவர், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் பெரும் பிரபலமான ஐக்கி பெர்ரி ஹவுஸ்மேட்டுகளிடம் ஃபிரண்ட்லியாக பழகி வந்தார்.

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும் கூட ஹவுஸ்மேட்டுகளை சந்தித்து நட்பு பாராட்டி வருகிறார். மேலும் தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கடந்த சீசனில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தியை தாமரை செல்வியுடன் சேர்ந்து சந்தித்திருக்கிறார் ஐக்கி பெர்ரி.

அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா மாமா.. பாடலுக்கு தாமரை செல்வியுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார் ஐக்கி பெர்ரி. குட்டி கவுனில் ஐக்கி பெர்ரி நடனமாடியுள்ள இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலான ஊ சொல்றியா பாடலுக்கு நடிகை சமந்தா இப்பாடல் உலகளவில் 100 மில்லியன் வியூஸ்களை குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஐக்கி பெர்ரி நடனமாடிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

newstm.in

Similar News