மகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் சிக்கினார் சித்தப்பா..!
மகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் சிக்கினார் சித்தப்பா..!
காரைக்கால் நகரப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் 14 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தொழிலாளியின் குடும்பத்துடன் அவருடைய 27 வயது தம்பியும் வசித்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், தொழிலாளியும் அவருடைய மனைவியும் வேலைக்கு சென்றபோது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அவரது சித்தப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் புகார் அளித்தனர். இதுபற்றி விசாரித்த குழந்தைகள் நலக்குழுவினர், அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காரைக்கால் நகர போலீசுக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பாவை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.