மாமியார் பிரச்சனையில் தற்கொலை செய்துகொண்ட மருமகள்! கணவன் எடுத்த விபரீத முடிவு!
இரண்டு குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை.. மாமியார் - மருகள் சண்டையால் சோகம்..
ராணிப்பேட்டையில் வசித்து வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரது கணவர் இரு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாமியார் - மருமகள் சண்டையே இந்த சோகத்திற்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராணிப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் தன் மனைவி நிர்மலா மற்றும் சஞ்சனா ஸ்ரீ மற்றும் ரித்திகா ஸ்ரீ ஆகியோரோடு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பெங்களூருவில் செவிலியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவர் அங்கு சென்றார்.
அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ராணிப்பேட்டையில் உள்ள வெங்கடேசனின் தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். நிர்மலாவுக்கும் மாமியாருக்கும் ஒத்துப் போகாததால் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி நிர்மலா தூக்குமாற்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
newstm.in