ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு !
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு !
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்டரீதியாகச் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் உத்தரவிட்டது. மேலும் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பெறுவதற்கும் 12 இலக்க ஆதார் அடையாள எண் கட்டாயமாகிவிட்டது. இந்த நிலையில் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான கடைசி தேதியாக மார்ச் 31 அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் கொரோனா 2வது அலை காரணமாக ஜூன் 31 வரை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆதார்- பான் இணைக்கவில்லை என்றால் பான்கார்டு செயலிழந்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது. 18 வகையான நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அவசியம் என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. எனவே, ஆதார்- பான் இணைக்கவில்லை என்றால் இந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
பிக்சட் டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு 10 சதவீதத்துக்குப் பதில் 20 சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும் எனவும், 15G, 15H படிவங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆதார்-பான் கார்டுகளை இணைப்பதற்கு 5 நாட்கள் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கால அவகாசத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத அவகாசத்திற்குள் ஆதார்- பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்து.
newstm.in