உலகிலேயே மிக குள்ளமான மனிதர் மரணம்

உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த 27 வயதான ககேந்திர தாபா மகர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த இவர் 67.08 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே கொண்டவர்.இவரது மொத்த உடல் எடை வெறும் 6 கிலோதான்.;

Update: 2020-01-19 05:28 GMT

உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த 27 வயதான ககேந்திர தாபா மகர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த இவர் 67.08 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே கொண்டவர்.இவரது மொத்த உடல் எடை வெறும் 6 கிலோதான். உலகிலேயே மிக குள்ளமான ஆண் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு வரை உலகின் குள்ளமான மனிதர் என்ற பட்டத்தை பெற்ற இவர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூன்ரே என்பவர் 59.93 சென்டிமீட்டர் உயரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தனது குள்ள மனிதர் பட்டத்தை இழந்தார்.


இந்நிலையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட  ககேந்திர தாபா மகர் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். 

newstm.in

Tags:    

Similar News