ஹிப்-ஹாப்பின் கோமாளி இளவரசன் மரணம்.. உலக ரசிகர்கள் கண்ணீர் !!
ஹிப்-ஹாப்பின் கோமாளி இளவரசன் மரணம்.. உலக ரசிகர்கள் கண்ணீர் !!
முன்னனி ராப் பாடகர் , தயாரிப்பாளர் பிஸ் மார்க்கி(Biz Markie). வேடிக்கை, முட்டாள்தனம், நகைச்சுவை என அனைத்தையும் எதார்த்தமான வார்த்தைகளையும் கலந்து இசை வடிவில் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றவர். படைப்பாற்றல் மற்றும் புதுமையான இசை ஆகியவை அவரை ஹிப்-ஹாப் மற்றும் பாப் கலாச்சாரம் இரண்டிலும் தனித்தனியாக ஆக்கியது.
தனது திறமையால் புகழின் உச்சிக்கு சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த பிஸ் மார்க்கி காலமானார். அவருக்கு வயது 57. அவரது துடிப்பான இசை ஆளுமை, நிலையான நகைச்சுவைகள் என்றும் நிலைத்துநிற்கும் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் கடந்த சில காலமாக நீரிழிவு நோயுடன் அவதியடைந்து வந்தார். கடந்த ஆண்டு நோய் தொடர்பான சிக்கல்களால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மேலும் பக்கவாதம் ஏற்பட்டது. மருத்துவமனையில் குணமடைந்தாலும் அவரது உடல் பலம் என்பது குறைந்துகொண்டே சென்றது. இந்த சூழலில் அவர் உயிரிழந்தார்.
இவர் தனது இளம் வயதில், 1988 ஆண்டு இன் கோயின் ஆஃப், 1989ஆம் ஆண்டில் தி பிஸ் நெவர் ஸ்லீப்ஸ் ஆகிய படைப்புகள் பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. அந்த நேரத்தில் வேறு எந்த ராப்பரைப் போலல்லாமல் தனக்கென்று சொந்த பாணியை உருவாக்கியது அதில் வெற்றி பெற்றார். அவருக்கு "ஹிப்-ஹாப்பின் கோமாளி இளவரசர்" என்ற புனைப்பெயரும் உள்ளது.
உண்மையில் இந்த பெயருக்கு அவர் பொருத்தமானவர். தனது ராப் பாடலில் நகைச்சுவை, வேடிக்கைதனம் இல்லாமல் இருக்காது.
newstm.in