பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 2ஆக அதிகரிப்பு.. உயிருக்கு போராடும் தொழிலாளர் !!

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 2ஆக அதிகரிப்பு.. உயிருக்கு போராடும் தொழிலாளர் !!

Update: 2022-01-30 07:45 GMT

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர் உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆமத்துார் அம்மன் கோவில்பட்டிபுதுாரில் சிவகாசி செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பயர் ஒர்க்ஸ் உள்ளது. இந்த பட்டாசு ஆலையின் கடைக்கோடியில் குழி தோண்டி வேலி அமைத்து பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. வார இறுதி நாளான நேற்று இரவு 7:30 மணியளவில் வழக்கம்போல் கழிவு பட்டாசுகளை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

ஓ.சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (52), சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த தேவேந்திரன் (33), அம்மன்கோவில்பட்டிபுதுாரை சேர்ந்த குபேந்திரன் (30) ஆகியோர்  கழிவு பட்டாசுகளை குழியில் கொட்டி தீவைத்து எரித்தனர். அப்போது கவனக்குறைவால் தீ பரவி விபத்து ஏற்பட்டது. மேலும் ஆலையில் பட்டாசு வெடித்ததில் இரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. 

இந்த பட்டாசு ஆலை விபத்தில் ஆறுமுகம் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். விருதுநகர் தீயணைப்புத்துறையினரால் 90 சதவீத காயத்துடன் மீட்கப்பட்ட தேவேந்திரன், குபேந்திரன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏ.டி.எஸ்.பி., சரவணன், டி.எஸ்.பி., அர்ச்சனா பார்வையிட்டனர். ஆமத்துார் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தப்போதும் அவை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மற்றொருவர் 90 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.

newstm.in

Similar News