ரீபோக் பிராண்டை விற்க முடிவு !!

ரீபோக் பிராண்டை விற்க முடிவு !!

Update: 2021-02-17 18:21 GMT

J.W.Forter&sons என்னும் பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனத்தை தொடங்கிய ஸ்தாபகரின் பேரன்கள் நிர்வகித்து வந்த போது, டிக்‌ஷனரியில் பார்த்த பெயர் ஒன்று மிகவும் பிடித்துப்போயுள்ளது.தென் ஆப்ரிக்காவில் வாழும் மான் போல் தோற்றம் கொண்ட விலங்கின் பெயரான ‘ரீபோக்’ என்பதே அந்த டிக்‌ஷனரியில் பார்த்த பெயராகும். பெயர் பிடித்து போக, உடனடியாக நிறுவனத்தின் பெயரை ரீபோக் என மாற்றியுள்ளனர். இன்று உலக அளவில் பிரபல ஷூ நிறுவனமாக விளங்கி வருகிறது.

ஆகஸ்ட் 2005 இல், அடிடாஸ் அதன் போட்டியாளர் ரீபொக் இண்டர்நேஷனல் லிமிடெட் பங்குகளில் 3.8 பில்லியன் டாலர் கொடுத்து 100 % பங்குகளை வாங்கி இன்று வரை கொடி கட்டி பறந்து வருகிறது. இந்நிலையில் ‘ரீபோக்’ பிராண்டை விற்க திட்டமிட்டுள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் இருந்து ‘ரீபோக்’ நிறுவனத்தின் வணிகம் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இதற்கான காரணத்தை அடிடாஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

Tags:    

Similar News