இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு ! கவலை அளிக்கும் உயிரிழப்பு விகிதம் !

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு ! கவலை அளிக்கும் உயிரிழப்பு விகிதம் !

Update: 2021-07-17 10:17 GMT

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை நேற்றுமுன்தினம் திடிரென மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்தது. எனினும் இன்று 2ஆவது நாளாக குறைந்துள்ளது.  

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 560 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மீண்டும் தினசரி உயிரிழப்பு இன்று அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 43,916 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியா முழுவதும் ஒப்பிடும் போது உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 3.99 (3,99,35,718) கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 3.88 கோடி பேருக்கு, குஜராத்தில் 2.90 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 4,24,025 பேர் நோய் தொற்றால் பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது சிகிச்சையில் இருப்போர் விகிதம் 1.36% ஆக உள்ளது. அதில் அதிகமாக கேரளாவில் 1,22,436 பேர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் 1,04,647 பேரும், கர்நாடகாவில் 31,422 பேரும், தமிழ்நாட்டில் 29,230 பேரும், ஆந்திராவில் 24,854 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 560 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் அதிக இறப்பு பதிவாகியுள்ளது. அங்கு 167 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக கேரளாவில் 130 பேரும், ஒடிசாவில் 64 பேரும், தமிழ்நாட்டில் 46 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 4,13,091 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.33ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 3,02,27,792  பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 97.31 சதவீதம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரம் மூலம் தெரியவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 13,452  பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கேரளாவில் 10,697 பேர், ஆந்திராவில் 3,001 பேரும், தமிழ்நாட்டில் 2986 பேரும், கர்நாடகாவில் 2,748 பேரும், அசாமில் 2,656 பேரும் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 39,96,95,879 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,12,557 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 44.20 கோடி (44,20,21,954) மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 19,98,715 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

newstm.in

Tags:    

Similar News