நாட்டு மக்களுக்கு தீபாவளி போனஸ் !! பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.10 குறைத்தது அரசு !

நாட்டு மக்களுக்கு தீபாவளி போனஸ் !! பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.10 குறைத்தது அரசு !

Update: 2021-11-03 20:44 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை காரணம் காட்டி இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. குறிப்பாக சென்னையில் பெட்ரோல் விலை 106 ரூபாயை தாண்டியது. டீசல் விலை 102 ரூபாயை தாண்டி விட்டது. 

நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து லிட்டர் 100 ரூபாயை எட்டியது. இதனால் மத்திய அரசு மீது மக்களுக்கு கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் ழுந்தது. இந்த நிலையில் தீபாவளியையொட்டி மக்களுக்கு போனஸ் அளிக்கும் வகையில் பெட்ரோல்,  டீசல் விலை குறைப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 

அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான இந்த கலால் வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News