தீரன் பட பாணியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்! பீதியில் மக்கள்!!

தீரன் பட பாணியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்! பீதியில் மக்கள்!!

Update: 2021-12-18 17:29 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் என்ற கிராமத்தில்  புஷ்கரன் என்பவர் அவரது தாய், பெரியம்மா, பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு அவரது வீட்டை மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். யார் என்று கேட்டதும், வீச்சருவாளைக்கொண்டு வீட்டை உடைக்க  முயன்றுள்ளனர்.

சுதாரித்துக்கொண்ட புஷ்கரன் கதவை திறக்கவில்லை.  இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் கதவு வழியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். அதில் வீட்டில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச்சென்றனர்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் நால்வரும் காயம் அடைந்ததை அடுத்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். புஷ்கரனின் வீடு தோட்டத்தில் தனியே இருந்ததாக கூறப்படுகிறது. 500 மீட்டர் சுற்றளவில் வீடுகள் எதுவும் இல்லாததை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட மூவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

Similar News