இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ஆவது அலை அச்சுறுத்தி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை புதிய உச்சத்தை தினந்தோறும் தொற்று ஏற்படுத்தி வருகிறது.கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது, மக்களின் இழப்புகளில் துணை நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும்  அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்துள்ளார். 

மேலும் அனைத்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ .5000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த நிதி நெருக்கடியில் அவர்களுக்கு இது ஒரு சிறிய உதவியாக இருக்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் 1,56,000 ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

Tags: