காதலிக்க மறுப்பு.. பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞர்..
காதலிக்க மறுப்பு.. பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞர்..
கோவையில் காதலிப்பதை நிறுத்திய இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை பகிர்ந்த இளைஞரை போலீசார் சிறையிலடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்தவர் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் வேலை செய்து வருகிறார். சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணும், ரூபனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்த பெண் ரூபனிடமிருந்து விலகி காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண்ணின் சகோதரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் ரூபனிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆபாச படங்களை பகிர்ந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரூபன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.
newstm.in