மாப்பிள்ளை கருப்பு என்பதால் கல்யாணத்துக்கு மறுப்பு.. மணப்பெண்ணுக்கு கோடாரி வெட்டு !

மாப்பிள்ளை கருப்பு என்பதால் கல்யாணத்துக்கு மறுப்பு.. மணப்பெண்ணுக்கு கோடாரி வெட்டு !

Update: 2021-07-13 17:22 GMT

கப்பூரை மாப்பிள்ளை கருப்பாக இருப்பதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்ணை அவரது அண்ணன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கப்பூரை சேர்ந்த சந்திரகலாவுக்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளார். மாப்பிள்ளை அனைத்து வகையிலும் தகுதியானவவர் என்றப்போதும் அவர் கருப்பாக இருப்பதாக கூறி சந்திரகலா முதலில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் குடும்பத்தினர் அந்தப்பெண்ணை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதம் பெற்றனர்.

இதனையடுத்து இருவீட்டாரும் சேர்ந்து இன்று (ஜூலை 13) திருமணம் முடித்துவைக்க முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து திருமணத்துக்கான பட்டு எடுப்பது, பத்திரிகை அடிப்பது என கல்யாண வேலை பரபரப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், அனைத்து வேலைகளும் முடிந்தது. இன்று தாலி கட்டவேண்டியது தான் பாக்கி. இந்த நேரத்தில் குடும்பத்தில் குண்டை தூக்கிபோட்டார் மணப்பெண்.

தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறி நேற்று வீட்டில் தகராறு செய்துள்ளார். மாப்பிள்ளை கருப்பாக இருப்பதால் எனக்கு பிடிக்கவில்லை கல்யாணத்தை நிறுத்துங்கள் நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என குடும்பத்தினரிடம் சண்டைப் போட்டுள்ளார். இப்போது சண்டைபோட்டால் எப்படி என பெற்றோர்கள் எடுத்துக்கூறியும் அந்தப்பெண் தனது முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளார்.

இதன்காரணமாக வீட்டில் அண்ணன் - தங்கை இருவருக்கும் தகராறு வந்துள்ளது. அப்போது கருப்பாக இருக்கும் பையன் வேண்டாம், அதற்கு முன்னால் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொள்கிறேன் என சண்டைபோட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் சகோதரன் ஷ்யாம் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து சந்திரகலாவை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் சந்திரகலா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கல்யாண வீடு சோகத்தில் மூழ்கியது.

தகவல் அறிந்துசென்ற போலீசார் தங்கையை கொலை செய்த ஷ்யாம் சுந்தரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

Tags:    

Similar News