முக்கிய வீரர்கள் இல்லாவிட்டாலும் மீண்டது ராஜஸ்தான்.. கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தியது !!
முக்கிய வீரர்கள் இல்லாவிட்டாலும் மீண்டது ராஜஸ்தான்.. கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தியது !!
மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 14ஆவது சீசனில் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேட்பன் சஞ்சு சாம்சங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து. அந்த அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் களமிறங்கினர். கில் 11 ரன்னிலும், ரானா 22 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த சுனில் நரைன் 6 ரன்னிலும், கேப்டன் மோர்கன் (0) ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய திரிபாதி 36 ரன்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 25 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். கடந்த போட்டியில் அதிரடி சரவெடி காட்டிய ரசல் ஏமாற்றம் அளித்தார்.
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர், 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆடினர். பட்லர் 5 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஷிவன் துபே 22 ரன்னிலும், தெவட்டியா 5 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடினார். 1, 2 ரன்களாக சேர்ந்த அவர் கிடைத்த வாய்ப்புள்ள பந்துகளை பவுண்ட்ரி, சிக்ஸர்களாக மாற்றினார். அவருக்கு மில்லர் ஒத்துழைப்பு கொடுத்தார். இறுதியில், ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்சன் 42 ரன்னும், மில்லர் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
newstm.in