பக்தர்களே, தரிசனத்திற்கு தடையில்லை - அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

பக்தர்களே, தரிசனத்திற்கு தடையில்லை - அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

Update: 2021-12-31 06:05 GMT

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி தரிசனத்திற்கு தடை இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவி வருவதை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன.

அதன்படி, தமிழகத்தில் கடற்கரை பகுதிகளில் டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், டிசம்பர் 31ம் தேதி இரவில் கோயில்கள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் பக்தர்களிடம் எழுந்தது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயில்களில் தரிசனம் செய்ய தடை இல்லை.

ஆனால், சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பக்தர்கள் கோயில்களில் தரிசனம் மேற்கொள்ளலாம்” என்றார். இதையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News