நடிகை நிக்கி கல்ராணியில் ஆடைகளை திருடிய இளைஞர் தனுஷ்!
நடிகை நிக்கி கல்ராணியில் ஆடைகளை திருடிய இளைஞர் தனுஷ்!
நடிகை நிக்கி கல்ராணியின் கேமரா மற்றும் ஆடைகளை திருடிய தனுஷ் என்ற இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் தங்கியுள்ள நடிகை நிக்கி கல்ராணி, அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த தனுஷ்(19) என்பவரை சில மாதங்களுக்கு முன் நியமித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த தனுஷ் தனது வீட்டிலிருந்து சில பொருட்களை திருடி சென்றுவிட்டார் எனவும் குறிப்பாக தனது ஆடைகள் மற்றும் தான் பயன்படுத்தி வந்த கேமரா ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் நிக்கி கல்ராணி மீது விசிக பிரமுகர் செல்லதுரை என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் என்பவரை பொருட்களை திருடியதற்காக சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி தனுஷின் பெற்றோர் விருதாச்சலத்தில் இருந்து சென்னை வந்து தன் மகனை காணவில்லை என்ற புகாரை அண்ணாசாலை காவல்நிலையத்தில் அளித்தனர்.இதனையடுத்து அண்ணாசாலை போலீசார் நிக்கிகல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் விலை உயர்ந்த கேமராவை நடிகை நிக்கி கல்ராணி வீட்டிலிருந்து திருடியதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து கேமரா மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட தனுஷை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in