வெற்றிமாறனுக்கு நன்றி சொன்ன தனுஷ்... இரட்டிப்பாக்குவோம் என கமல்ஹாசன் வாழ்த்து !!

வெற்றிமாறனுக்கு நன்றி சொன்ன தனுஷ்... இரட்டிப்பாக்குவோம் என கமல்ஹாசன் வாழ்த்து !!

Update: 2021-03-23 10:45 GMT

டெல்லியில் நேற்று 2019ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 7 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக திரைப்படத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஸ்வாசம் படத்திற்காக சிறந்த ஆல்பம் விருது பெறுகிறார் டி.இமான். சூப்பர் டீலக்ஸ் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணைநடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்புபடத்திற்கு 2 தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக அசுரம் படம் தேர்வாகி இருக்கிறது.கே.டி. எனும் கருப்புதுரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதும், ஒத்த செருப்பு படத்தின் சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்கொட்டிக்கும், சிறப்பு பிரிவின் ஜூரி விருது ஒத்த செருப்பு படத்திற்கும் கிடைத்திருக்கிறது. இதனை திரைப்படத்துறையினர் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர், 7 தேசிய விருதுகள் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களுக்கும், அவர்தம் அணியினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம். வெல்க தமிழ் சினிமா என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் அசுரன் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற தனுஷ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறினார். மேலும் வெற்றிமாறனின் 4 படங்களில் நடித்தது, 2 படங்களை தயாரித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

newstm.in


 

Tags:    

Similar News