தனுஷ், சிம்புவுடன் பட ஹீரோயின்க்கு ஆண் குழந்தை.. வைரல் போட்டோ!

தனுஷ், சிம்புவுடன் பட ஹீரோயின்க்கு ஆண் குழந்தை.. வைரல் போட்டோ!

Update: 2021-06-06 17:24 GMT

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய. இவர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சிம்புவின் ஒஸ்தி படத்திலும் நடித்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரிச்சா திடீரென சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றுவிட்டார். அதன்பின்னரும் அங்கு அவர் ஒரு கல்லூரியில் சேர்ந்து எம்.பி.ஏ. படித்த ரிச்சா கங்கோபத்யாய, தன்னுடன் சேர்ந்து படத்த ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து கடந்த 2019ம்அ ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைதளத்தில் அறிவித்தார். இந்நிலையில் அவர் மே மாதம் 27ஆம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு லூகா ஷான் லாங்கெல்லா என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ரிச்சா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதனிடையே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்கள் பிள்ளை லூகா ஷான் லாங்கெல்லா மே மாதம் 27ம் தேதி பிறந்தார். அப்பாவும், அம்மாவும் நலம். லூகா ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறான். பார்க்க அவன் தந்தையை போன்றே இருக்கிறான். ஆனால் அம்மாவின் மூக்கும், முடியும் இருக்கிறது. லூகா, நீ எங்கள் வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறாய்.

ஜோ லாங்கெல்லா இல்லாமல் எனக்கு அமைதியான அனுபவம் இருந்திருக்காது. அவர் தான் சிறந்த தந்தை. எனக்கு பிரசவ காலத்தில் நம்பிக்கை அளித்து, ஊக்குவித்தார். என் பிரசவத்தின் போது அம்மா இங்கு வந்தது நல்லது. என் குடும்பத்தார் எங்கள் மகனை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News