ஜெர்சியை அன்பளிப்பாக அளித்த தோனி.. பாகிஸ்தான் வீரர் நெகிழ்ச்சி !!

ஜெர்சியை அன்பளிப்பாக அளித்த தோனி.. பாகிஸ்தான் வீரர் நெகிழ்ச்சி !!

Update: 2022-01-08 10:45 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் வெளிநாட்டு அணி வீரர்களும் அவருக்கு தீவிர ரசிகர்களாக உள்ளனர். 

தோனியின் கேப்டன்ஷிப், அணுகுமுறை என அனைத்தையும் புகழ்வர். இந்த நிலையில் தற்போது  பாகிஸ்தான் அணி வீரருக்கு தோனி பரிசு ஒன்று அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

அதாவது, தோனி, தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பவுலர் ஹரிஸ் ராஃப்-க்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அதில் அவரது ஆட்டோகிராப்பையும் தோனி போட்டுக் கொடுத்துள்ளார். 

 அதனை ஹரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடியுள்ளார்.  அவரது பதிவில், கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவரும், கேப்டன் கூலுமான தோனி எனக்கு அழகான பரிசாக அவரது ஜெர்சியை கொடுத்து சிறப்பித்துள்ளார். ‘7’ அவரது எண்ணங்கள் மூலம் பலரது மனங்களை வென்று வருகிறார், என சொல்லி தோனி தனக்கு பரிசாக கொடுத்த ஜெர்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
 


 
newstm.in

Tags:    

Similar News