இளம்பெண்களை அச்சுறுத்தும் வகையில் டிக்டாக்.. புடிச்சி உள்ளேபோட்ட போலீஸ்..

இளம்பெண்களை அச்சுறுத்தும் வகையில் டிக்டாக்.. புடிச்சி உள்ளேப்போட்ட போலீஸ்..

Update: 2020-02-21 16:35 GMT

இந்தியா முழுவதும் பெரும்பாலானவர்கள் “டிக் டாக்” செயலியை பயன்படுத்தி வீடியோ தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு “டிக்டாக்” செயலி மூலம் வீடியோ தயார் செய்து வெளியிடும் சிலர் மற்றவர்களின் மனம் புண்படும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி ராஜாளிகுடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் டிக்டாக் வீடியோவில் அதிக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார்.

அதாவது பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்கள், முதியவர்கள் முன்பு திடீரென குதித்து நடனமாடி வந்துள்ளார். சிலர் விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும் இதனால் அச்சமடைந்தவர்கள் ஏராளமானோர். இதையடுத்து அப்பகுதி மக்கள் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் குறித்த புகார்கள் புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாரின் கவனத்திற்கு செல்லவே, அவர் கண்ணனை கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கண்ணன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட மாணவர் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News