ஓபிஎஸ் மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாஜகவுடனா கூட்டணியை விமர்சித்தேனா..?

ஓபிஎஸ் மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாஜகவுடனா கூட்டணியை விமர்சித்தேனா..?;

Update: 2021-07-09 05:50 GMT

விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு, பாஜகவுடனான கூட்டணியே காரணமே என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து சர்ச்சையான நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், பாஜக உடனான கூட்டனியால்தான் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிட்டது எனக் கூறிய கருத்து தம்முடைய சொந்த கருத்து என்றும், மற்றபடி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாஜகவுடனா கூட்டணியை விமர்சித்து பேசினீர்களா எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Tags:    

Similar News