மைதானத்தில் கெட்ட வார்த்தையில் பேசிய தினேஷ் கார்த்திக்.. வைரலாகும் வீடியோ !
மைதானத்தில் கெட்ட வார்த்தையில் பேசிய தினேஷ் கார்த்திக்.. வைரலாகும் வீடியோ !
இந்தியாவில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பங்கேற்றன. கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மைதானத்தில் சக தமிழக வீரர்களிடம் தமிழில் பேசுவார்.
அவ்வப்போது போடு மச்சான்.. போடு மாமே.. என பல பேச்சுகள் மைதானத்தில் ஒலிக்கும். இந்நிலையில் அவ்வாறு தினேஷ் கார்த்திக் நேற்று தமிழில் பேசிய பேச்சு ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி பவுலிங் போட வந்தாலே தமிழில் பேசி தினேஷ் கார்த்திக் அவருக்கு அறிவுரை வழங்குவார்.
இந்நிலையில், நேற்று ரோஹித் பேட்டிங் செய்யும் போது ஸ்டெம்புக்கு பின்னால் நின்று தினேஷ் கார்த்திக் தமிழில் கெட்ட வார்த்தையில் கத்தினார். அதாவது அந்த வார்த்தையை கூறி வருண் சக்ரவர்த்தியை உற்சாகப்படுத்தியுள்ளார். ஆனால் இதை கோபமாக திட்டும் விதத்தில் தினேஷ் கார்த்திக் பயன்படுத்தவில்லை.
தற்போது இந்த பேச்சுதான் சர்ச்கையாகி உள்ளது. அந்த வகையில் தினேஷ் கார்த்திக் நேற்று மைதானத்தில் ஸ்டம்ப் மைக் அருகே இப்படி கெட்ட வார்த்தை பேசிய வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Dinesh Karthik the Man😂😂😂🔥🔥🔥🔥. Headphones must. #KKRvMI #dineshkarthik pic.twitter.com/eIrMazjaKl
— Adithya Rengarajan (@adithya243) April 13, 2021
newstm.in