இயக்குனர் ஷங்கர் மகளுக்கு நாளை திருமணம்..! : மாப்பிள்ளை யார் தெரியுமா..?

இயக்குனர் ஷங்கர் மகளுக்கு நாளை திருமணம்..! : மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Update: 2021-06-26 15:43 GMT

இந்தியாவின் முன்னணி இயக்குநராகத் திகழ்பவர் ஷங்கர். தற்போது இவர், ராம் சரண் நடிக்கும் படம், ‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக், ‘இந்தியன்-2’ என மூன்று படங்களில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. டாக்டரான ஐஸ்வர்யா, புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித்தை திருமணம் செய்யவுள்ளார். 

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் இத்திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Tags:    

Similar News