முடக்கப்பட்ட டுவிட்டர் கணக்குகள்.. இந்திய அரசியலில் தலையீடு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

முடக்கப்பட்ட டுவிட்டர் கணக்குகள்.. இந்திய அரசியலில் தலையீடு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Update: 2021-08-14 08:58 GMT

டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சிறுமியின் பெற்றோரை சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். அவர்களுக்கு ஆர்தல் கூறியதோடு அவர்களின் புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார்.

இதுதொடர்பான புகாரில், அவரது ‘டுவிட்டர்’ கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியது. பின்னர் அவரது பதிவை பகிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அவர்களின் பாலோவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. இதற்கெல்லாம் மேலாக காங்கிரசின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கையும் முடக்கியது.

இந்தநிலையில், ‘டுவிட்டர்’ நிறுவனத்தை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். எனது டுவிட்டர் கணக்கை முடக்கியதன் மூலம், இந்திய அரசியல் நடவடிக்கையில் ‘டுவிட்டர்’ நிறுவனம் தலையிடுகிறது. இந்திய அரசியலை தீர்மானிக்கும் பணியை ஒரு கம்பெனி செய்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதி என்ற முறையில் இதை நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

இதனிடையே, இந்தியா டுவிட்டர் நிறுவனத்தின தலைமை அதிகாரியை அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்து டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

newstm.in

Tags:    

Similar News