கே.வி.ஆனந்த் மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு - கமல்

கே.வி.ஆனந்த் மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு - கமல்

Update: 2021-04-30 12:22 GMT

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

கே.வி.ஆனந்துக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவரது உடல் நேராக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியானது.வழியில் 5 நிமிடங்கள் மட்டும் அவர் வீட்டில் மரியாதை செய்ய வைக்கப்பட்டது.பின் அவரது உடல் நேரடியாக பெசன்ட் நகர் மின் மயானதிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

கே.வி.ஆனந்த் மறைவிற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்  ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். "பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு  சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி "  என பதிவிட்டுள்ளார்.
 

newstm.in

Tags:    

Similar News