பிரதமர் தொகுதியில் அவலம்.. ஆம்புலன்ஸ் இல்லாததால் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட சடலம் !

பிரதமர் தொகுதியில் அவலம்.. ஆம்புலன்ஸ் இல்லாததால் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட சடலம் !

Update: 2021-04-21 08:21 GMT

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டைவிட தற்போது கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிவல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது என்பதும் அதேபோல் ஆக்சிஜன் மற்றும் மருந்துப் பொருள்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன .

குஜராத், உ.பி, உள்ளிட்ட வடமாநிலங்களில் சடலங்கள் சாலையோரங்களிலும் கங்கை ஆற்றின் கரையோரங்களிலும் எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். 

மேலும் ஆம்புலன்ஸ்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை கிடைக்கவில்லை. இதனை அடுத்து குடும்பத்தினர் வேறு வழியின்றி ஒரு ஆட்டோவை பிடித்து அந்த ஆட்டோவின் மேல் இறந்தவரின் சடலத்தை கயிறால் கட்டி அதில் எடுத்துச் சென்றனர்

இந்த வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட கிடைக்காமல் இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதா என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதான் டிஜிட்டல் இந்தியாவா எனவும் சாடி வருகின்றனர். 
மேலும் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நடந்த இந்த வேதனையான சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


newstm.in


 

Tags:    

Similar News