`ஆஸ்டிரா ஜெனிகா’ தடுப்பூசி திட்டத்தில் இருந்து நீக்கம்!

`ஆஸ்டிரா ஜெனிகா’ தடுப்பூசி திட்டத்தில் இருந்து நீக்கம்!

Update: 2021-04-16 15:15 GMT

உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பெரும்பாலான நாடுகள் அவசரகால தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டில் ஆஸ்டிரா ஜெனிகா கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது.இந்நிலையில், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியை போட்டு கொண்டவர்களில் பலருக்கு பின்விளைவுகளும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அது குறித்த ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

டென்மார்க், ஐஸ்லாந்து,அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து மற்றும் நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளும் இந்த தடுப்பூசியை தடை செய்தன. எனினும், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து வைத்துள்ள பரிசோதனை தரவுகளின் அடிப்படையில், ரத்தம் உறைவதற்கான எந்த சான்றுகளும் இல்லை என தெரிவித்திருந்தது.உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியால் ரத்த கட்டு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை என தெரிவித்த போதிலும் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளும் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்தன.

இதனை தொடர்ந்து, ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பற்றி ஐரோப்பிய மருத்துவ கழகம் மேற்கொண்டு ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தடுப்பூசி போடப்படும் 40 ஆயிரம் பேர்களில் ஒருவருக்கு தொடர்ச்சியான ரத்த உறைவு காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணிகளை செயல்படுத்தும் போது அதிக அளவு நம்பிக்கை மற்றும் அதற்கான ஆதரவு ஆகியவை மிக முக்கியம் எனவும் அதனால், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியை, தடுப்பூசி போடும் திட்டத்தில் இருந்து நீக்கியிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News