கணவருடன் தகராறு.. கிணற்றில் குதித்த மனைவி.. காப்பாற்ற முயன்ற கணவன் பலி..!

கணவருடன் தகராறு.. கிணற்றில் குதித்த மனைவி.. காப்பாற்ற முயன்ற கணவன் பலி..!

Update: 2022-01-09 11:58 GMT

கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் நீரில் மூழ்கி உயிழந்தார். அதிர்ஷ்டவசமாக மனைவி உயிர் பிழைத்தார்.

நாக்பூரில் உள்ள புடிபோரி பகுதியில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் நீரில் மூழ்கி இறந்து, மனைவி உயிர் பிழைத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்தில் உணவை சமைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு காரணமாக மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து மனைவியை காப்பாற்ற அந்த கணவனும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் அந்த கணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனால், கிணற்றில் இருந்த குழாயைப் பிடித்தபடி மூழ்காமல் இருந்த மனைவி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

Similar News