மாவட்டச் செயலாளர்கள் அறிவாலயத்திற்கு அழைப்பு..!

மாவட்டச் செயலாளர்கள் அறிவாலயத்திற்கு அழைப்பு..!

Update: 2021-06-24 15:20 GMT

தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் மாதம்15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, முடிவுகளை அறிவிக்க வேண்டும் என, மாநில தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், தமிழகம் முழுவதும் இன்னும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில், “நாளை மாலை 5 மணிக்கு, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News