திமுக ஆன்மிகத்திற்கு எதிரான அரசு அல்ல.. நாமக்கல்லில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திமுக ஆன்மிகத்திற்கு எதிரான அரசு அல்ல.. நாமக்கல்லில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Update: 2022-01-03 04:35 GMT

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடமாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

“அனைத்து நல்ல திட்டங்களையும் பாஜக எதிர்த்து வருகிறது. ஆக்கபூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை செயலாற்ற வேண்டும்.

தொடர்ந்து திமுக ஆன்மிகத்திற்கு எதிரான அரசு அல்ல, திமுக ஆட்சிக்கு வந்த பின் 437 பேரிடம் இருந்து ரூ.1,640 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்டகப்பட்டுள்ளது.  நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும்” என்றார்.

Similar News